டெல்லி போராட்டம் தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வில் இன்று விசாரணை

​​நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்
Published on: 
Summary

டெல்லி போராட்டம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு இன்று (ஞாயிறு) விசாரிக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இன்று காலை 10.30 மணிக்கு மனுக்களை விசாரிக்க உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

நேற்று முன் தினம் - அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, ​​சிஜேபி போராட்டங்களுக்கு முன்பு பொதுப் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அப்படியிருந்தும், நேற்று 45 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும், அவற்றுக்கு இணங்காததாகவும் குற்றம் சாட்டி, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தலைவர் டி. தாரா ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

கைது

நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தொண்டர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டத்தின் போது, ​​நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான மேனகா குருசாமி இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தன் மனுவில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை ஒடுக்குவதற்கு, குறிப்பாக இதற்கு முன்பு மாநிலங்களை ஆண்ட தலைவர்களுக்கு எதிராக, இதுபோன்ற தடுப்புக் காவலைப் பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com