பஞ்சாபில் சப்-இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sub Inspector
Published on: 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் சுக்‌செயின் சிங்.

துப்பாக்கி சூடு

அவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அமிர்தசரசில் உள்ள ஜக்தேவ் குர்த் கிராமம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் சப்- இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் அவரது இடது கையில் குண்டுகாயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சப்- இன்ஸ்பெக்டர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மீண்டும் சம்பவம்

கடந்த மாதம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்தான் வாலா தானிய சந்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com