

அருனாச்சல பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மூன்று ரிக்டருக்கும் அதிகமான அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அப்பர் சியாங் பகுதியில் இன்று அதிகாலை 3.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது,
மேலும் இது புவியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் ஆழம் வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் இன்று அதிகாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும் இது புவியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் வரை பாதித்துள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தில், உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.