1984ல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சோனியா காந்தி எழுதிய புத்தகத்தை தீயிட்டு எரித்த சீக்கிய அமைப்பினர்

பஞ்சாபில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற நடவடிக்கைக்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.
Sonia Gandhi's Book Burnt
Published on: 
Summary

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து, அந்த புத்தகத்தின் பிரதியை டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு உறுப்பினர்கள் தீயிட்டு எரித்தனர்.

பஞ்சாபில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற நடவடிக்கைக்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கையின் போது, சிக்கிய மதகுருவான ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே உயிரிழந்தார்.

இதையடுத்து 1984, அக்டோபர் 31 அன்று, இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்கள் சுட்டு படுகொலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராகராஜீவ் காந்தி பதவி ஏற்று கொண்டார். இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பலர் உயிரிழந்தனர்.

1987 இல் அமைக்கப்பட்ட அஹூஜா குழு, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலில், 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

இதையடுத்து டெல்லியில் 1984 நவம்பர் 3 அன்று இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல்களை, சோனியா காந்தி தனது ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1984 அக்டோபர் 31 அன்று ராணுவத்தை நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் ஜெனரல் வைத்யா அருகிலுள்ள சில படைப்பிரிவுகளில் சீக்கியர்கள் இருந்த காரணத்தால், அவர்களை திரட்டுவதை விரும்பவில்லை என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை தொடர்ந்து, குர்தாஸ்பூர், பீகாரில் உள்ள ராம்கர், புனே மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் சீக்கிய படைவீரர்களால் ஆங்காங்கே கலகங்கள் ஏற்பட்டதாகவும், அவற்றில் பல சீக்கிய அதிகாரிகள் பங்கேற்றதாகவும், தனது சுயசரிதையில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதையில், 1984 அக்டோபர் 31 அன்று ராணுவத்தை நிலைநிறுத்த உத்தரவிட்டதாகவும், ஆனால் பல சீக்கியர்கள் உயிரிழந்ததற்கு ராணுவ உயர் அதிகாரிகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சோனியா காந்தியின் சுயசரிதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு உறுப்பினர்களும், புத்தகத்தின் பிரதியை டெல்லியில் தீயிட்டு எரித்தனர்.

X