

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். அவரது 109-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லி சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணு கோபால் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது பேத்தியும், காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி அவரது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிறந்தநாள் வாழ்த்துகள். புலி பெண்ணே. உங்களை போல வேறொருவர் இனி இருக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வலிமை, துணிச்சல் மற்றும் திறமையான தலைமைத்துவத்திற்கு உதாரணமாக திகழ்ந்த இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று இந்திரா காந்தி. அவரை ஒட்டுமொத்த நாடும் நினைவு கூர்கிறது என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.