3 முறை முதலமைச்சராக இருந்தவருக்கே இந்த கதியா?.. கெஜ்ரிவாலுக்கு SIR நோட்டீஸ் அனுப்பப்பட்டதை விமர்சித்த ஆம் ஆத்மி

டெல்லியின் வரைவு வாக்களர் பட்டியலில் 47.6 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்
Published on
Summary

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பட்டியல் நடைமுறை டெல்லியிலும் நடந்து வருகிறது.

அங்கு ஆம்ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தார் 5 பேரின் பெயர் மற்றும் விவரங்கள் பழைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்தவில்லை (unmapped category) என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகன் புல்கித் கெஜ்ரிவால் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால், தாய் கீதா தேவி ஆகியோருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

நியூ டெல்லி-40 சட்டமன்ற தொகுதியில் கெஜ்ரிவால் வாக்காளராக உள்ளார். டெல்லி தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்பத்தார் 5 பேர் புது டெல்லி-40 தொகுதியில் உள்ள 'பார்ட்-51, கேஜி மார்க்' இல் வாக்களித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி விமர்சனம்

இதை விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, " இந்த நாட்டில் நடக்கும் எல்லாமே விஸ்வகுருவை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க மட்டும் தானா? மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த்கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டது எப்படி" என தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியுள்ளது.

மறுபுறம், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் கொண்டோர் பட்டியலில் வந்துள்ளதால் அவருக்கும் கூட நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான டெல்லியின் வரைவு வாக்களர் பட்டியலில் 47.6 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். 1.45 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 97.5 லட்சமாக சுருங்கியுள்ளது.

அவர்களில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிப்போரின் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com