ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்கள் இணைவது ஏற்பு - மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது.
ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்கள் இணைவது ஏற்பு - மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு
Published on

ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் ராகவ் சத்தா, அசோக் மித்தல், சந்தீப் பாடக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி மற்றும் ஸ்வாதி மாலிவால் ஆகிய 7 பேர் பாஜகவில் இணைந்தனர்.

இந்த 7 எம்.பி.க்களும் தங்களை பாஜக எம்.பி.க்களாக கருத வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்து இருந்தனர்.

கட்சி மாறிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம், ஆம்ஆத்மி கட்சி குழு தலைவர் சஞ்சய் சிங் மனு அனுப்பினார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் பாஜகவுடன் இணைவதை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் பாஜகவின் பலம் மாநிலங்களவை 113 ஆக உயர்ந்து உள்ளது.

அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com