இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிராக் பஸ்வான் பாடம்

சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது.
சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்
Published on

தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதானை மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிச் செய்ததன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்களின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி கண்டது.

இந்த வெற்றியால் உந்தப்பட்டு உந்தப்பட்டு இ20 பெட்ரோல் எதிர்ப்பு, சாதி வாரி இடஒதுக்கீடு எதிர்ப்பு என பல ஆன்லைன் இயக்கங்கள் உருவாகின.

போராட்டம்

அதில், இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த சிலர் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினர். அவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. இருப்பினும் இன்றும் சிலர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மத்திய உணவு பதப்படுத்தல் தொழிலாளர் துறை அமைச்சரும் லோக் ஜனதா சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான் பேசியுள்ளார்.

டெல்லிக்கு புறப்படும்முன் பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இடஒதுக்கீட்டின் தேவை

இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

யாருடைய கோரிக்கையின் பேரிலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடிய ஒன்று அல்ல. இட ஒதுக்கீடு என்பது தான தர்மம் கிடையாது.

தலைமுறை தலைமுறையாக சமூக பாகுபாட்டை சந்தித்து வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு உரிமை.

இட ஒதுக்கீடு என்பது எந்தவொரு அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில் நீட்டிக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் சலுகை அல்ல, மாறாக அது ஒரு அரசியலமைப்புச் சட்ட விதி.

நீண்ட நெடிய காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை பொதுச் சமூகத்துடன் இணைக்க கொண்டு வரப்பட்டதே இடதுகீடு முறை ஆகும்.

பட்டியலின, பழங்குடியின சமூகங்களை கண்டறிந்து அவற்றின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அம்சமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

கார்கே எதிர்கொண்ட பாகுபாடு

உத்ரகாண்டில் காங்கிரஸ் தலைவர் கார்கே ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பின் அந்த மேடையை "சுத்திகரிப்பு" செய்வதாக இந்துத்துவா அமைப்பொன்று பூஜை செய்த நிகழ்வை சுட்டிக்காட்டிய பஸ்வான், "சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது. சமூக நீதியை வலிமைப்படுத்தி வேண்டிய அவசியம் இன்னும் தேவையாக உள்ளது." என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை

ஜந்தர் மந்தரில் போராட்டம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் குறித்து பேசிய அவர், யாரும் அவர்களின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது.

அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் இடஒதுக்கீட்டின் நோக்கம் குறித்தும், அது ஏன் தொடர வேண்டும் என்பது குறித்தும் புரிய வைப்போம் என தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com