மதுபோதையில் காருக்குள் ரீல்ஸ்.. நொடியில் நடந்த விபத்து.. 2 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ

விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மதுபோதையில் காருக்குள் ரீல்ஸ்.. நொடியில் நடந்த விபத்து.. 2 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ
Published on

மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி பெரிய புள்ளிகளின் மகன்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்க்கு காரணமாகும் சமபாவங்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புனேவில் மதுபோதையில் தொழிலதிபரின் 17 வயது மகன் இயக்கிய போர்ச்சே சொகுசு கார் மோதி 2 இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ரமேஷ் ஷாவின் மகன் குடிபோதையில் பி.எம்.டபில்யூ காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மதுபோதையில் 19 , 20 வயதுடைய 5 இளைஞர்கள்  சமூக  வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீலிஸ் செய்து கொண்டே காரை இயக்கி சாலையோரம் இருந்த வேலி மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஜூலை 11 அதிகாலை 2.38 மணியளவில் இந்த விபத்து நடந்த்துள்ளது. விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி  ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com