மாநிலங்களவை தேர்தல் - பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் உள்பட 16 வேட்பாளர்கள் அறிவிப்பு

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி:

தமிழகம், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக மொத்தம் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. 

இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். 

மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்.

தஷ்னா சிங் உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com