8 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராகுல் காந்தி கைது: டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு..!

ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி பேரணி நடத்தினர்.
Rahul Gandhi
ராகுல் காந்தி
Published on: 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா கூட்டணியினர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் பாராளுமன்ற பில்டிங்கில் இருந்து, தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடத்தை நோக்கி பேரணி சென்றனர்.

தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி

அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையகத்திற்கு முன்னதாக தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது தடுப்பை தாண்டி பேரிகார்டு மீது ஏறி செல்ல முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் அப்படியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் ராகுல் காந்தி அந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

இறுதியாக சுமார் 8 மணி நேரத்திற்குப்பின் போலீசார் கைது செய்து அவர் காவல் வாகனத்தில் ஏற்றினர். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர், இந்தியா கூட்டணியினர் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com