இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு ராகுல்காந்தி தேநீர் விருந்து: சமூக, மாணவ அமைப்புகளுக்கும் அழைப்பு

டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டில் இன்று மாலை 4 மணிக்கு இந்த தேநீர் விருந்து நடைபெறுகிறது.
Rahul Gandhi
Published on: 

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி பேரணி சென்றனர். ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி தலை வர்கள் ஊர்வலமாக சென்று தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக மனுவை அளித்தனர்.

இந்த நிலையில் பாராளு மன்ற மக்களவை எதிர்க் கட்சி தலைவரான ராகுல் காந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார்.இது குறித்து அவர் தந்து சமூகவலைதள பதிவில் குறிபிட்டுள்ளதாவது

மாணவ அமைப்புகளுக்கு அழைப்பு

டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டில் இன்று மாலை 4 மணிக்கு இந்த தேநீர் விருந்து நடைபெறுகிறது. இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்புகள், மாணவ அமைப்புகளுக்கும் ராகுல் காந்தி இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

தேநீர் விருந்துக்கு பிறகு ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலை வர்கள் பத்திரிகையா ளர்களை சந்திக்கிறார்கள். அப்போது தலைமை தேர் தல் கமிஷனருக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com