எனது தந்தையை கொல்வதற்காகவே அவரது SPG பாதுகாப்பு படை அகற்றப்பட்டது: ராகுல் காந்தி

இந்திய பிரதமர்களை பாதுகாப்பதற்காக 1988 ஆம் ஆண்டு எஸ்.பி.ஜி பாதுகாப்பு படை நியமிக்கப்பட்டது.
SPG Removal: Rahul Gandhi alleges it led to Rajiv Gandhi's assassination
Published on: 
Summary

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் பாதுகாப்பை, அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அகற்றியதை தொடர்ந்து, அவர் சுட்டு கொல்லப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர்களை பாதுகாப்பதற்காக கடந்த 1988 ஆம் ஆண்டு எஸ்.பி.ஜி (SPG) பாதுகாப்பு படை நியமிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து 1989 காலகட்டத்தில் பிரதமராக ஆட்சிக்கு வந்த வி.பி.சிங், ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இந்த சூழலில் ராஜீவ் காந்தியை, அவரது பாதுகாவலர்கள் சுட்டு படுகொலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படை (SPG) பாதுகாப்பு வழங்கும் வகையில் SPG சட்டம் திருத்தப்பட்டது.

இந்த நிலையில், தனது தந்தையின் SPG பாதுகாப்பை நீக்கியதே, அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காணொளியில், “ராகுல் காந்தி அவரின் அப்பாவுடன் பீகாருக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு வந்தபோது, நாம் அப்பாவின் பாதுகாப்பிற்காக ஏதாவது செய்யவில்லை என்றால், மிக விரைவில் அவருடைய இறுதி சடங்கிற்கு தான் நான் திரும்பி வருவேன் என என்னிடம் கூறினார்”.

இந்த நிலையில் 2004 இல் எடுக்கப்பட்ட அந்த முடிவு, சிலருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்ததாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது அம்மா, அத்தனை துயர சம்பவங்களையும் கண்ணியத்துடனும், தைரியத்துடனும் எதிர்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

X