போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் சமூகம் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி, ஒவ் வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் மூலம் நாட்டு மக்க ளுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 140-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசிய தாவது
போதைப்பொருள் பயன்பாடு என்பது நமது இளைஞர் களின் கனவுக ளுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத் துள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவ தும் சமூகம் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
போதைப்பொருள் இல்லாத இளைஞர் இயக்கம் மிக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பல இளைஞர்கள் தங்களது மன உறுதியால் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
கடந்த காலங்களில் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல மறைந்துவிடும். ஆனால் தற்போது தொலைந்து போன தொலைபேசியை உங்களால் மீண்டும் பெற முடியும். இதற்கு இந்திய அரசின் டிஜிட்டல் தளமான சஞ்சார் சாதி பெரிதும் உதவும். இதுவரை சஞ்சார் சாதி இணைய தளத்தை 30 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
அதன் செயலியை சுமார் 3 கோடி முறை பதிவிறக்கம் செய்துள்ள னர். வங்கிகள், பணப் பரிவர்த்தனை செயலிகள், தொலைத்தொடர்பு நிறுவ னங்கள் மற்றும் காவல்துறை மட்டுமின்றி, 1,600-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சஞ்சார் சாதி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இது இணையவழி மோசடி முயற்சிகளை சரியான நேரத் தில் தடுக்க உதவி உள்ளது. இதன் உதவியால் இதுவரை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்தச் செயலி 23 மொழி களில் கிடைக்கிறது. மேலும் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
இந்திய கால்பந்து அணி இந்த ஆண்டு சாதனை படைக்கும் விதமாக 10-வது முறையாக சாப் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
பேட்மிண் டன் வீரர் லக்சயா சென், ஜெர்மனி மற்றும் ஜப்பா னில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து 2 ‘சூப்பர் 500 பட்டங்களை வென்று உள்ளார். குமமோட் டோ மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் அவர் ஆவார். பி.வி. சிந்து ‘ஹைலோ ஓபன் போட்டியில் வெற்றி பெற்று இந்த ஆண்டு இந்தியா வுக்கு மேலும் ஒரு பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.