உ.பி.யில் கோவிலுக்கு வந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக சியாம் பிகாரி என்பவர் வேலை செய்து வந்தார்.
Uttar Pradesh temple Priest gets life sentence
Published on: 
Summary

உத்தரப் பிரதேசத்தில் கோவிலுக்கு வந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவற்றை வெளிநாட்டிற்கு விற்பனை செய்த பூசாரி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில் சியாம் பிகாரி என்பவர் பூசாரியாக வேலை செய்து வந்தார்.

இவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பூசாரி கைது

இதையடுத்து கடந்த 2025 ஜூன் 17 அன்று மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பூசாரி சியாம் பிகாரி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஜெயின்ட் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து, பூசாரி சியாம் பிகாரியை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

வீடியோ எடுத்த பூசாரி

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிகளுக்கு கோவில் பிரசாதம் தருவதாக கூறி பூசாரி அவர்களை ஓர் அறைக்குள் அழைத்து சென்று வீடியோ எடுத்தது தெரியவந்தது.

பின்னர் அந்த வீடியோக்களை வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கு ஆன்லைன் மூலம் பூசாரி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இதையடுத்து 2025 ஆகஸ்ட் 18 அன்று பூசாரி சியாம் பிகாரி மீது புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு மீதான விசாரணை மதுரா கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பிரிஜேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆயுள் தண்டனை

அப்போது நீதிபதி, குற்றவாளி சியாம் பிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து அபராத தொகையாக ரூபாய் 1.43 லட்சம் செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.

X