பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்தார்

சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்தார்
Published on

பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.

பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com