புகழ்பெற்ற பத்திரிகையாளரும் இசைக்கலைஞருமான சகுந்தலா நரசிம்மன் முதியோர் இல்லத்தில் மறைவு

இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருந்த அரிய ஆளுமையாகவும் அவர் திகழ்ந்தார்.
சகுந்தலா நரசிம்மன்
Published on: 
Summary

பத்திரிகையாளரும் கர்நாடக இசைக்கலைஞருமான சகுந்தலா நரசிம்மன் புற்றுநோயால் காலமானார்.

புகழ்பெற்ற பத்திரிகையாளரும் கர்நாடக இசைக்கலைஞருமான சகுந்தலா நரசிம்மன் காலமானார். அவருக்கு வயது 86.

மறைவு

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பெங்களூரு ஹலசூருவில் உள்ள ஜெரி கேர் ஹோம் என்ற முதியோர் இல்லத்தில் அவர் காலமானார்.

நேற்று அதிகாலை 5:15 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி

இரட்டை முனைவர் பட்டம் பெற்ற சகுந்தலா நரசிம்மன், பல முன்னணி செய்தித்தாள்களில் பணியாற்றியுள்ளார்.

இதழியலை தாண்டி, பல்வேறு துறைகளிலும் அவரால் தனது முத்திரையை பதித்துள்ளார்.

பயண எழுத்தாளர், இசை அறிஞர், விமர்சகர் மற்றும் நுகர்வோர் உரிமை ஆர்வலர் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தார்.

இந்துஸ்தானி மற்றும் கர்நாடக செவ்விசை ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு அரிய ஆளுமையாகவும் அவர் திகழ்ந்தார்.

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

அவரது மறைவு கலை, இதழியல், சமூகப் பணி ஆகிய துறைகளுக்கு பெரும் இழப்பாகும்.

சகுந்தலா நரசிம்மன் புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் எம். எஸ். நரசிம்மனை மணந்தார்.

இவர்களுக்கு ஷோபனா என்ற மகளும், மோகன் என்ற மகனும் உள்ளனர். பத்மபூஷன் விருது பெற்ற எம். எஸ். நரசிம்மன் கடந்த 2021 இல் மறைந்தது குறிப்பிடத்தக்கது.

X