உ.பி.யில் பா.ஜ.க. அரசு அமையாமல் இருப்பதை உறுதி செய்ய AIMIM அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்: ஒவைசி

எதிர்க்கட்சிகளுக்கும் இதே நோக்கம் இருந்தால், அவர்களுடன் கைகோர்க்க ஏ.ஐ.எம்.ஐ.எம். தயாராக உள்ளது.
Asaduddin Owaisi
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக அரசு அமையாமல் இருப்பதை உறுதி செய்ய தங்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

ஷாம்லி மாவட்டத்தின் கைரானாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி, "பா.ஜ.க. அரசு அமையாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்" என்று கூறினார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். தயார்:

மேலும், யோகி ஆதித்யநாத் மூன்றாவது முறையாக உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராவதை தங்கள் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பிற எதிர்க்கட்சிகளுக்கும் இதே நோக்கம் இருந்தால், அவர்களுடன் கைகோர்க்க ஏ.ஐ.எம்.ஐ.எம். தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் பிற நலிந்த பிரிவினரின் பிரச்சினைகளை எழுப்புவதில் எதிர்க்கட்சிகள் "தோல்வியடைந்துவிட்டன" என்று ஒவைசி விமர்சித்தார்.

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் மசூதிகள் இடிக்கப்படுவதாகவும், மாநிலத்தில் "பாதி என்கவுண்டர்கள்" தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால், எதிர்க்கட்சிகள் இது குறித்து எந்த குரலும் எழுப்பாமல் "மௌனம்" காப்பதாக அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com