

ஆன்லைன் உணவு வினியோக நிறுவனமான சொமேட்டோ, தனது உணவு வினியோக தள கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ரூ.2.40 உயர்த்தி உள்ளது. இதனால் அக்கட்டணம் ரூ.12.50-ல் இருந்து ரூ.14.90 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் ரூ.14.99 கட்டணம் வசூலித்து வருகிறது. மற்றொரு நிறுவனமான 'மேஜிக்பின்' ஏற்கனவே ரூ.14.20 வசூலித்து வருவதால், இப்போதைக்கு கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.