பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல் வழங்க மத்திய அரசு ஆலோசனை!

E20 பெட்ரோலால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மீண்டும் E10 பெட்ரோல் வழங்க பொருளாதார ஆலோசகர் பரிந்துரைத்துள்ளார்.
E10Petrol
Published on

இந்தியாவில் இயங்கும் பழைய வாகனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து மத்திய அரசின் மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

த்தனால் கலப்பால் ஏற்படும் சவால்கள்

இந்தியாவில் தற்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், நாட்டின் சாலைகளில் இயங்கும் சுமார் 7.5 கோடி முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்கள் 'கார்புரேட்டர்' தொழில்நுட்பம் கொண்டவை. இந்த பழைய என்ஜின்களால் E20 பெட்ரோலில் உள்ள கூடுதல் ஆக்சிஜனைச் சீரமைக்க முடிவதில்லை. இதனால் என்ஜின் விரைவில் சூடாவதோடு, பழைய ரப்பர் பாகங்களும் சேதமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பொருளாதார ஆலோசகரின் பரிந்துரை

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தனது அறிக்கையில், பழைய வாகனங்களின் என்ஜின் ஆயுளைப் பாதுகாக்கவும், நுகர்வோரின் கவலையைப் போக்கவும் E10 பெட்ரோலையும் ஒரு விருப்பமாக பெட்ரோல் பங்குகளில் மீண்டும் வழங்க பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.

மத்திய அரசின் பரிசீலனை

E20 பெட்ரோலுக்கு பொருந்தாத பழைய வாகன உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், உணவு உற்பத்தி மற்றும் எத்தனால் பயன்பாட்டிற்கு இடையேயான சமநிலையைப் பேணும் வகையிலும், மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com