நேபாள வெள்ளப் பாதிப்பு: 4 விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது.
நேபாள வெள்ளப் பாதிப்பு: 4 விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!
Published on

பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா இதுவரை 4 ராணுவ விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயும் உள்ள நிலையில், ஆக.26 முதல் தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

இதில் தார்பாய்கள், கூடாரங்கள், போர்வைகள், மற்றும் சுகாதாரக் கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நிவாரணப் பொருட்கள் மட்டுமின்றி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக தொழில்நுட்பக் குழுக்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் உபகரணங்களையும் அனுப்பியுள்ளது.

நீர்மின் நிலைய சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, அதிநவீன உபகரணங்களுடன் கூடிய பிரத்யேகச் சுரங்கத் தொழில்நுட்பக் குழு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் நேபாளத்திற்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com