நேருவின் பழைய படங்களை பகிர்ந்து வம்பிழுத்த நிஷிகாந்த் தூபே - பதிலடி கொடுத்த காங்கிரஸ்

ஜாக்குலின் கென்னடிக்கு நேரு வண்ணம் பூசிய படமே அது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நிஷிகாந்த் தூபே
நிஷிகாந்த் தூபே
Published on

கட்டிப்பிடிப்பதே பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில் ஜவஹர்லால் நேருவின் பழைய புகைப்படங்களை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பகிர்ந்துள்ளார்.

நிஷிகாந்த் துபே

நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், நேரு தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட், மருமகள் நயன்தாரா சேகல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடி மனைவி ஜாக்குலின் கென்னடி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக இந்திரா காந்தி, பிடல் காஸ்ட்ரோ மற்றும் யாசிர் அராபத் ஆகியோரைக் கட்டியணைக்கும் படங்களையும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கட்டியணைத்த படத்தையும் துபே பகிர்ந்திருந்தார்.

காங்கிரஸின் பதிலடி

நிஷிகாந்த் துபேயின் இந்தப் பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், புகைப்படங்கள் அவற்றின் உண்மையான Context இல் இல்லாமல் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

புகைப்படங்களின் பின்னணியை விளக்கிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், ஒரு புகைப்படத்தில் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவருடைய கன்னத்தில் அன்புடன் முத்தமிடுகிறார்.

மற்றொரு படத்தில் அவரது மருமகள் நயன்தாரா சேகல் அவர்களுடன் இருக்கிறார்.

மற்றொன்று, 1962 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ஜாக்குலின் கென்னடிக்கு நேரு வண்ணம் பூசிய படமே அது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com