

2026 ஆம் ஆண்டிற்கான NEET - UG மறுதேர்வு இன்று, நாடு முழுவதும் நடைபெற்றது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களுக்கு மத்தியில், பலத்த பாதுகாப்புடன் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
மாணவர்களுக்காகக் காத்திருந்த பிரதமர்..
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1.15 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
வழக்கமாக பிரதமர் பயணிக்கும் போது, அவரது பாதுகாப்பு வாகன அணிவகுப்பிற்காக சாலைகளில் தாற்காலிகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படும்.
மதியம் 2:00 மணிக்கு நீட் தேர்வு தொடங்கவிருந்ததால், அந்தச் சமயத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் தேர்வு மையங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
பிரதமர் உடனடியாக விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டால், டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்படலாம் என கருதினார்.
இதன் காரணமாக, மாணவர்கள் எந்தவித இடையூறும் இன்றி தேர்வு மையங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு புறப்படாமல் 45 நிமிடங்கள் வரை டெல்லி விமான நிலையத்திலேயே காத்திருந்தார்.
பின்னர் 2.30 மணிக்கு தேர்வு தொடங்கியதும் அங்கிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமரின் இந்த செயல் அனைத்து மாணவர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான NEET-UG..
இந்த ஆண்டு நீட்-யுஜி மறுதேர்வுக்காகத் தேசிய தேர்வு முகமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
நாடு முழுவதும் மொத்தம் 5,440 தேர்வு மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகள், 1.38 லட்சம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்காணிப்பு வசதி கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மின்னணு முறைகேடுகளைத் தடுக்க 51,000-க்கும் மேற்பட்ட சிக்னல் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
சோதனையிடும் பணியில் 39,000 பணியாளர்களும், பயோமெட்ரிக் சரிபார்ப்பில் 48,000 பணியாளர்களும், 6,700 கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பிரதமரின் பொறுப்பான செயல்பாடு காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.