நீட் முதுநிலை தேர்வு தேதி அறிவிப்பு

நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
நீட் முதுநிலை தேர்வு தேதி அறிவிப்பு
Published on

இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com