வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்கள் பெயர் மிஸ்சிங்: யோகி ஆதித்யநாத்

அரசு திட்டங்களை பெறுபவர்களில் சுமார் 55 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
Published on: 

நாடு முழுவதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் சுமார் 13.39 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த வருடம் உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

பாஜக மாநில நிர்வாக கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்களுக்கு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

1.27 இந்துக்கள் பெயர் நீக்கம்

SIR நடவடிக்கையால் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 1.27 கோடி இந்துக்கள் பெயர் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர்கள் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்க பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 1.27 கோடி இந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தகுதியான வாக்காளர்கள் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.

மேற்கூறிய நீக்கங்கள், 28 நகர்ப்புற உள்ளாட்சி தொகுதி வார்டுகளில் கட்சியின் நிலையை பலவீனப்படுத்துவதாக இருந்தன. தற்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையில் 16 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்திருக்க வேண்டும். தற்போது சுமார் 13 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் இருந்து பஞ்சாயத்து தேர்தலின்போது 66 லட்சம் வாக்காளர்கள் பெயர் இடம் பெறவில்லை. அரசு திட்டங்களை பெறுபவர்களில் சுமார் 55 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. 18 வயது முதல் 19 வயது வரையிலான 4.5 லட்சம் பெயர் இடம் பெறவில்லை.

முந்தைய SIR-ன்போது 4 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. பாஜக தொண்டர்கள் பூத் லெவல் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அனைத்து தகுதியான வாக்காளர்கள் பெயர்களையும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். வழக்கமான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மொத்தமாக 2.04 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் SIR மேற்கொள்ளப்பட்ட போது சுமார் 2.04 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில் பெரும்பாலான வாக்காளர்கள் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள். மேலும், பெண்கள். 84 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

X