ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கம் மாதிரி நிகழ்ச்சி: ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக

நாடாளுமன்றம் போன்று செட் அமைத்து இந்தியா கூட்டணி பதவி நீக்கம் நிகழ்ச்சி நடத்தியது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 

வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக பதவி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு

இதற்கிடையே இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் மாதிரி பாராளுமன்ற கூட்டத்தை நடத்தி ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நிகழ்ச்சியை காங்கிரஸ் நடத்தியது. இதில் மாதிரி பாராளுமன்றம் போன்று செட் அமைக்கப்பட்டது.

பாஜக கிண்டல்

இந்த நிலையில் ராகுல் காந்தியை பாஜக கிண்டல் செய்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "தேர்தல்களில் உண்மையாக வெற்றிபெற முடியாமல், தனக்கு விருப்பமான ஒரு நாடாளுமன்ற சூழலில் அமர்ந்திருக்கிறார்" என்று பாஜக கிண்டல் செய்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தலைவராக செயல்பட, மல்லிகார்ஜூன கார்கே தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

X