மனைவிக்கு ஐஸ்கிரீம் ஊட்டிய எம்.எஸ்.தோனி - அம்பானி நடத்திய நவராத்திரி மேளா - இணையத்தில் வைரல்

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலைய்ன்ஸ் டவுன்ஷிப்பில் அம்பானி குடும்பத்தின் சார்பில் நவராத்திரி மேளா நேற்று நடைபெற்றது.
Dhoni-Ambani Navratri Viral
Published on: 
Summary

குஜராத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி சார்பில் நடைபெற்ற நவராத்திரி மேளாவில், ரசிகர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கலந்துரையாடிய நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலைய்ன்ஸ் டவுன்ஷிப்பில் அம்பானி குடும்பத்தின் சார்பில் நவராத்திரி மேளா நேற்று நடைபெற்றது.

நவராத்திரி மேளா

இந்த நவராத்திரி மேளாவில் தனது மனைவி சாக்‌ஷி சிங் உடன் எம்.எஸ்.தோனி கலந்துகொண்டார்.

இந்த திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனந்த் அம்பானி

இந்த வீடியோவில், ஆனந்த் அம்பானி மற்றும் அவரின் மனைவி ராதிகாவுடன் இணைந்து தோனி டிராகன் படகு சவாரி செல்வது பதிவாகியுள்ளது.

இதையடுத்து அந்த மைதானத்தில் இருந்த கேளிக்கை சவாரிகளில் விளையாடி விட்டு, பின்னர் அவர்கள் ரசிகர்களிடையே உரையாடுவதும் பதிவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து நவராத்திரி மேளாவை ஏற்பாடு செய்திருந்த ஆனந்த அம்பானி தனது மனைவியுடன் இணைந்து, விருந்தினர்களை உபசரிப்பதும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com