ராகுல் காந்தி செல்லும் போக்கை பார்த்தால், காங்கிரசில் அவர் மட்டும்தான் எஞ்சியிருப்பார்: நிதின் நபின்

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ராகுல் காந்தி- நிதின் நபின்
ராகுல் காந்தி- நிதின் நபின்
Published on: 

டெல்லியில் பாஜக சார்பில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் (Loktantra Bachao, Arajakta Hatao) பேரணி நடைபெற்றது. இந்த பேரணி ஜெயின் லால் கோவிலில் இருந்து டவுன் ஹால் சவுக் வரை நடைபெற்றது. இதில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், டெல்லி மாநில பாஜக தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கம் கொண்ட எஸ்.ஐ.ஆர் (SIR) நடவடிக்கையால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், ஊடுருவல்காரர்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதில் பாஜக உறுதியாக உள்ளது.

ராகுல் காந்திக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

ராகுல் காந்திக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ என்ன கட்டளையிடுகிறார்களோ, அதைக் கேட்டு மட்டுமே அவரது கட்சி செயல்படுகிறது.

பிரதமர் மோடி செங்கோட்டைக்கு மீண்டும் வருவார்

மோடி எங்கும் செல்லப்போவதில்லை. 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும், சுதந்திர தினத்தன்று பிரதமர் உரையாற்றும் இடமான செங்கோட்டையின் கொத்தளத்திற்கு மீண்டும் வருவார்.

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அவர் செல்லும் போக்கைப் பார்த்தால், விரைவில் அந்தக் கட்சியில் எஞ்சியிருக்கும் ஒரே தொண்டர் அவராகத்தான் இருப்பார்.

X

Maalai Malar
www.maalaimalar.com