பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.போட்டிகள் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளன.
பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

பிரதமர் மோடியுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

"கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தார்.

 அதன்படி, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்று வரும் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.

வரும் 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com