மைக்ரோசாப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் 3 விமானங்கள் ரத்து

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மைக்ரோசாப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் 3 விமானங்கள் ரத்து
Published on: 
Summary

மைக்ரோசாப்ட் சேவை செயலிழப்பு டெல்லியில் விமானச் சேவைகளைப் பாதித்தது.

மைக்ரோசாப்ட்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் சர்வரில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் அந்நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

தொழில்நுட்ப கோளாறு

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் சேவை செயலிழப்பு டெல்லியில் விமானச் சேவைகளைப் பாதித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து புனே, மும்பை, லே ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 2 விமானங்கள் தாமதமாகின. இதற்கிடையே மற்ற விமான நிறுவனங்கள் இதுவரை எந்த சேவை பாதிப்புகளையும் தெரிவிக்கவில்லை.

X