பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களை இனி இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) நிர்வகிக்கும் சைபர் கிரைம் போர்ட்டலுக்கு நேரடியாக தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது
மெட்டா நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திடம் (NCMEC) முதன்மையாகப் புகாரளித்து வந்தது.
ஆனால் தற்போது குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், டீப்ஃபேக்குகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்கள் தொடர்பாக மத்திய அரசு வழியுறுத்தலின் அடிப்படையில் மெட்டா இந்த முடிவை அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் குழந்தையை பாலியல் ரீதியாக சுரண்டப்படும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யு உள்ளடக்கம் இருப்பதாக கூறப்பட குற்றச்சாட்டின் பேரில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது.
அதில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களைக் கொண்ட டெலிகிராம் சேனல்களின் விளம்பரங்களுடன், இன்ஸ்டாகிராம் பாலியல் ரீதியான ஆபாசத்தை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களைக் கொண்டிருந்ததாக பிபிசி ஐ நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாக குறிப்பிப்பிட்டிருந்தது.
மேலும் குழந்தைகளின் இணையதளப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் செயல்படும் எந்தவொரு சமூகவலைதள நிறுவனத்துக்கும் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்; இதில் சமரசத்துக்கு இடமில்லை எனவும் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இதுபோன்ற நேரடி தொடர்பு ஏற்படுத்த முன்வந்துள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மெட்டா நிறுவனம் முதலாவதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குழந்தைகளை பாதுகாப்பது மெட்டா நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றும் என்றும்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் இந்திய அரசுடன் இணைந்து செயல்படவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.