மீரட் 'ப்ளூ டிரம்' வழக்கு: சௌரப் ராஜ்புத்தின் மனைவி, மனைவியின் கள்ளக்காதலன் குற்றவாளி என தீர்ப்பு!

ராஜ்புத்தின் குடும்பத்தினர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீரட் 'ப்ளூ டிரம்' வழக்கு: சௌரப் ராஜ்புத்தின் மனைவி, மனைவியின் காதலன் குற்றவாளி என தீர்ப்பு!
Published on: 

கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய, உத்தரப்பிரதேச முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மீரட் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மற்றும் தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பும், சௌரப்பின் குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

வழக்கின் பின்னணி

கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த வணிக கடற்படை அதிகாரியான சௌரப் ராஜ்புத்தை (29) அவரது மனைவி முஸ்கானும், மனைவியின் கள்ளக்காதலன் சாஹிலும் இணைந்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

கொலைக்கு பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, உறுப்புகளை நீல நிற ட்ரம் ஒன்றில் போட்டு, அதனை சிமெண்ட் கலவை ஊற்றியும் மூடினர்.

ராஜ்புத்தின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என புகாரளிக்க இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது இந்த வழக்கு இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றபோது வழக்கறிஞர் சேர்ந்து இருவரையும் சராமாரியாக தாக்கிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின.

13 மாத விசாரணை

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கொலை வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 13 மாதங்களில் 126 விசாரணைகள் நடைபெற்றன. 22க்கும் மேற்பட்டோர் சாட்சிக் கூறினர்.

இந்நிலையில் இன்று மீரட் நீதிமன்றம் இருவரையும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com