'மன் கி பாத்' எனக்கு ஒரு புனித யாத்திரை.. 'மனதின் குரல்' தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் நெகிழ்ச்சி

இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் சக பயணிகளாகவும், உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருந்துள்ளீர்கள்.
பிரதமர் மோடி
Published on: 
Summary

மன் கி பாத் (மனதின் குரல்) 12 ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி வார இறுதியில் மக்களுடன் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்வில் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடி தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மனதின் குரல்

முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி 2014 அக்டோபர் 3 அன்று விஜயதசமி நாளில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று (அக்டோபர் 31) ஒளிபரப்பான 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 139வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இந்தப் பயணத்தில் தன்னுடன் பயணித்து, தனக்கு உத்வேகம் அளித்த அனைத்து நேயர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

புனித யாத்திரை

அவர் கூறியதாவது, "12 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயதசமி அன்று, நாங்கள் 'மன் கி பாத்' நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

அன்று முதல், எங்கள் பயணம் தடையின்றித் தொடர்கிறது. இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் சக பயணிகளாகவும், உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருந்துள்ளீர்கள்.

நமது நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் பாரம்பரியம் இருந்து வருகிறது.

நாட்டு மக்களின் முயற்சிகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் சேவைகளுக்கு வணக்கம் செலுத்துவதற்கும் 'மன் கி பாத்' எனக்கு ஒரு புனித யாத்திரைக்குச் சற்றும் குறைவானதல்ல.

சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் வாழும் மக்கள், அவர்களே ஒரு புனிதத் தலம் போன்றவர்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், நான் ஒரு வகையில் நமது நாட்டு மக்களின் வலிமைக்கு மரியாதை செலுத்துகிறேன்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று கூறினார்.

இந்த 12 ஆண்டுகளில், சமூகத்தால் கவனிக்கப்படாமல் போன பல மாபெரும் மனிதர்களின் அசாதாரணமான பணிகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாட்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்கும்போது, ​​ஒரு குடும்ப உறுப்பினரின் நடுவில் அமர்ந்து பேசுவது போல் உணர்வதாகப் பலரும் தனக்கு செய்தி அனுபவத்தில் மகிழ்ச்சி அடைவதாக மோடி மேலும் தெரிவித்தார். அவர்களின் அன்பும் பாசமும் விலைமதிப்பற்ற சொத்து என அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com