பெற்றோர் நகைகளை விற்று வீடு வாங்கிய நபர்: ரூ.60 லட்சத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பெற்றோர் மற்றும் பாட்டியிடம் இருந்து பெற்ற தங்க நகைகளால் வருமான வரி சிக்கல்.
வருமான வரி
வருமான வரி
Published on: 
Summary

பெற்றோர் மற்றும் பாட்டியிடம் இருந்து மரபு உரிமையாக பாரம்பரிய தங்க நகைகளை விற்று வீடு வாங்கிய நபருக்கு, சுமார் ரூ.60 லட்சம் வருமான வரி தொடர்பான சிக்கல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடிய ஒருவர், தனது தந்தையிடமிருந்து 968 கிராம் தங்க நகைகளையும், தாயிடமிருந்து 310 கிராம் தங்க நகைகளையும் பெற்றதாகக் கூறியுள்ளார். மேலும், பாட்டியின் உயில் மூலம் சில தங்க நகைகள் தனக்குக் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நகைகளை விற்று கிடைத்த பணத்தில் அவர் குடியிருப்பு வீடு வாங்கியுள்ளார். இதற்காக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54F-ன் கீழ் ரூ.34.39 லட்சம் வரிச் சலுகையும் கோரியுள்ளார்.

போதிய ஆவணங்கள் இல்லை

ஆனால், தங்க நகைகள் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்ததற்கான போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி வருமான வரித்துறை அந்த சலுகையை நிராகரித்தது.

இதுமட்டுமின்றி, அவரது மற்றும் மனைவியின் வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்ட ரூ.25.68 லட்சம் ரொக்கப் பண வைப்புகளுக்கும் உரிய விளக்கம் இல்லை எனக் கூறி அவற்றையும் கணக்கில் சேர்த்தது. இதனால் மொத்தம் ரூ. 60.08 லட்சம் வருமானத்தில் சேர்க்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (ITAT) அணுகினார். வழக்கை விசாரித்த மும்பை தீர்ப்பாயம், மேல்முறையீட்டு அதிகாரி கூடுதல் ஆவணங்களைக் கோரி புதிய நோட்டீஸ் அனுப்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, வழக்கை மீண்டும் விசாரிக்க வருமான வரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

60 லட்சம் ரூபாய் வரித்தொகை

முக்கியமாக ரூ.60 லட்சம் வரித் தொகை இறுதியாக ரத்து செய்யப்படவில்லை. உரிய ஆவணங்களுடன் வழக்கை மறுபரிசீலனை செய்யவே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத்தினரிடமிருந்து தங்கம், பணம் பெறும்போது அதற்கான ஆதாரங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

X