போட்டி போட்டுக்கொண்டு லட்டு சாப்பிட்ட இளைஞர்கள் - 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ

குஜராத்தில் இளைஞர்கள் லட்டு உண்ணும் வீடியோ வைரலாகியுள்ளது.
Gujarat Ladoo Eating Contest Viral
Published on
Summary

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் விழா ஒன்றில் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

குஜராத்தில் உள்ள தர்னேதர் என்ற கிராமத்தில் உள்ளுர் மக்களிடம் லட்டு உண்ணும் போட்டி நடைபெற்றது.

அப்போது அந்த போட்டியில் மொத்தம் 28 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியானது விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை, குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்டப் பயிற்சி மையம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜலாவார் பகுதியின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் வேரூன்றிய இந்த போட்டியைக் காண உள்ளூர் கிராம மக்கள் திரண்டனர்.

25 முதல் 75 வயதுக்குட்பட்ட 28 போட்டியாளர்கள், பருப்பு மற்றும் சர்க்கரை தூவப்பட்ட கடலை மாவு லட்டுகளை 30 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து போட்டி தொடங்கியதும், போட்டியாளர்கள் தங்களால் இயன்ற அளவு லட்டுகளை வேக வேகமாக சாப்பிட தொடங்கினர்.

இதற்கைடையில் போட்டியின் போது சராசரியாக 15 லட்டுகளை சாப்பிட்ட பிறகு, முதல் 15 நிமிடங்களுக்குள் பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இறுதிச் சுற்றில், ஐந்து போட்டியாளர்கள் முதலிடத்திற்காக போட்டியிட்டதால், போட்டி மேலும் தீவிரமடைந்தது.

போட்டியாளர்கள் 22, 24 மற்றும் 26 லட்டுகளை எட்டியபோது, பார்வையாளர்கள் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பட்டத்தை வெல்வதற்கான தங்களது முயற்சிகளை போட்டியாளர்கள் தொடர்ந்ததால், இறுதி நிமிடங்களில் பரபரப்பு அதிகரித்தது.

இறுதியில், ராகவானி என்ற இளைஞர் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்டு முதலிடம் பிடித்தார், மேலும் அவருக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com