உ.பி. ஆளுநர் பயணித்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசியவர் கைது

முன்னதாக கடந்து சென்ற ஒரு சரக்கு ரெயில் மீதும் அவர் கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது.
vande Bharat and Anandi Ben Patel
Published on

உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பயணம் செய்துகொண்டிருந்த மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சூரத் அருகே ஒருவர் கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த நபர் லேசான மனநிலை பாதிப்பு உடையவர் என்றும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மர்ம நபர் கைது:

யூனியன் பிரதேச நிர்வாகம் தமனில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபெல் படேல் வாபி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் ஏறினார்.

சூரத் மாவட்டத்தில் உள்ள உத்ரான் காவல் நிலையத்தின் வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், அந்த நபர் ரெயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) பிடிக்கப்பட்டதாகவும் வதோதரா கோட்டத்திற்கான மேற்கு ரெயில்வேயின் காவல் கண்காணிப்பாளர் (SP) அபய் சோனி தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு அந்த நபர் RPF ரோந்து பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.

சதி முயற்சி அறிகுறி இல்லை:

"அவரது பையில் கற்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையின் போது, ​​அவர் ஒரு நாய் மீது கற்களை எறிந்ததாக ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கூறினார். முன்னதாக கடந்து சென்ற ஒரு சரக்கு ரெயில் மீதும் அவர் கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது," என்று சோனி தெரிவித்தார்.

அந்த நபர் "சற்று மனநிலை சரியில்லாதவராக" தோன்றியதாக கூறிய அவர், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு திட்டமிட்ட அல்லது சதி முயற்சி இருந்ததற்கான அறிகுறியும் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com