இவங்களுக்கா வாக்களித்தீங்க? அண்ணியை சரமாரியாக தாக்கிய மைத்துனர்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை சமினா கொண்டாடியுள்ளார்.
இவங்களுக்கா வாக்களித்தீங்க? அண்ணியை சரமாரியாக தாக்கிய மைத்துனர்
Published on

போபால்:

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. பா.ஜ.க.வின் வெற்றியை அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த மாநிலத்தின் சிஹோர் மாவட்டம் அகமத்பூர் பகுதியைச் சேர்ந்த சமினா (30). இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

பா.ஜ.க. ஆதரவாளரான இவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதையும் சமினா கொண்டாடியுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட சமினாவின் செய்கைகளை அவரது மைத்துனன் ஜாவித் கான் விரும்பவில்லை. இதனால் தகாத வார்த்தைகளால் திட்டிய ஜாவித் கான் சமினாவை சரமாரியாக தாக்கியுள்ளார். பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவாக வாக்களித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் மீது சமினா போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com