ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்

மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் முன்னொரு சமயத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
ராகுல், இப்ராஹிம், பிரியங்கா
ராகுல், இப்ராஹிம், பிரியங்கா
Published on
Summary

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது பிரிக்ஸ் மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.

இன்று காலை டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார்.

அவர்களுடன் காலை உணவு அறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் மற்றும் ஆசியான் கூட்டமைப்பில் மலேசியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது.

முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, மலேசிய பிரதமர் இப்ராஹிமுடன் பிரதமர் மோடி வர்த்தகம், செமிகண்டக்டர், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு

காங்கிரசை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024 டிசம்பரில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது புகழஞ்சலி செலுத்திய இப்ராஹிம் அவரை மதிப்புமிக்க நேசமிகு நண்பர் எனவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கை புகழ்ந்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வலுவான உலக பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் சென்றார் என கூறியிருந்தார்

இப்ராஹிம் 1990களில் மலேசியாவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர். மன்மோகன் சிங் அக்காலத்தில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை பின்பற்றினார் இப்ராஹிம்.

அங்கு அரசியல் நெருக்கடி காலத்தில் தான் ஜெயிலில் இருந்தபோது மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் முன்னொரு சமயத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான மன்மோகன் சிங்கின் போராட்டத்தையும் அவர் புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங் ஒரு வினோதமான அரசியல்வாதி என்றாலும் உண்மையானவர் என்றும் அவர் எதிர்கால தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்கிறார் எனவும் இப்ராஹிம் புகழ் மாலை சூட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com