

டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள மங்கோல்புரி தொழிற்பேட்டை (ஃபேஸ்-1) காலணித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டெல்லி மங்கோல்புரி தொழிற்பேட்டையில் உள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தொழிற்பேட்டையின் முதற்கட்டடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில்,நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கி பல மணி நேரம் தீயுடன் போராடிய பின்னர், தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மீட்புபணியின் போது தொழிற்சாலைக்குள் மயக்க நிலையில் இருந்த ஆறு பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் நால்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.காயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக இரவு சுமார் 9:32 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது.மீட்பு பணியில் ஆறு பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது ஒரு காலணி உற்பத்தி ஆலையாகும், இங்கு காலணிகள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், இந்தத் தீ விபத்து அடித்தளத்தில் ஏற்பட்டது, நாங்கள் அடித்தளத்திலேயே தீயை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து மற்ற தளங்களில் தீ பரவாமல் தடுத்ததாக தெரிவித்தார்.
தீ விபத்து நடந்த நேரத்தில் எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர் என்பதை உறுதி செய்வதற்காக, போலீசார் ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு இருந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்காக ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்களிடமும் நாங்கள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.