

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற லூலா டா சில்வாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவரும் தற்போதைய அதிபருமான லூலா டா சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனான பிளாவியோ போல்சனாரோ இடையே கடும் போட்டி நிலவியது.
அக்டோவர் 4 அன்று நடந்த முதற்கட்ட வாக்குபதிவு முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நேற்று (அக்டோபர் 25) அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் லூலா 51.21 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்ற நிலையில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பிளாவியோ போல்சனாரோ 48.79 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
லூலா டி சில்வா வரும் 2027 ஜனவரியில் அவர் மீண்டும் அதிபர் பதவி ஏற்பார். இது அவர் அதிபராகவும் 4வது முறையாகும்.
முன்னதாக ஜனவரி 1, 2003 முதல் ஜனவரி 1, 2011 வரை தொடர்ச்சியாக 2 பதவி காலங்களுக்கு பிரேசிலை அவர் ஆட்சி செய்தார்.
பின்னர் 2023 முதல் தற்போதுவரை 3வது முறையாக அதிபராக உள்ளார். 2027 முதல் 4வது முறை அதிபராகிறார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ள லூலா டா சில்வாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்பு நண்பர், அதிபர் லூலா பெற்ற மகத்தான தேர்தல் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பல்வேறு பரிமாணங்களை கொண்ட இந்தியா - பிரேஸிலின் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.
நாம் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம். தெற்குலகின் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வோம்.
அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான மற்றும் நிலையான ஒரு உலகத்தை நோக்கிப் பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா இடம்பெற்றுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.