காங்கிரசில் இணையும் ஹர்பஜன் சிங்? -வைரலாகும் புகைப்படம்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்துவுடன் ஹர்பஜன் சிங்
சித்துவுடன் ஹர்பஜன் சிங்
Published on

சண்டிகர்:

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்று 2019-ம் பாராளுமன்ற தேர்தலின்போதிலிருந்தே பேசப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதை தொடர்ந்து அந்த செய்தி உண்மையில்லை என ஹர்பஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்தார். 

அந்த சலசலப்பு அடங்கிய நிலையில், தற்போது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு, ‘இந்த புகைப்படம் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. ஜொலிக்கும் நட்சத்திரம் பாஜி’ என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து ஹர்பஜன் சிங் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரா? என இப்போது கேள்விகள் எழ தொடங்கியுள்ளன. அவர் காங்கிரஸில் இணைந்தால் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com