பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

எல்.கே. அத்வானி நேற்று இரவில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.நரம்பியல் துறையின் மூத்த டாக்டரின் கண்காணிப்பில் அவர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

புதுடெல்லி:

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி, நேற்று இரவில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 96 வயதான அவர் முதுமை காரணமான உடல்நல பாதிப்புகளுக்காக சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஒருநாள் இரவு முழுவதும் சிகிச்சை பெற்றார்.

அங்கிருந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பின்பு அவருக்கு மீண்டும் உடல்நல கோளாறுகள் ஏற்பட்டதால் நேற்று இரவு 9 மணி அளவில் அவர் டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நரம்பியல் துறையின் மூத்த டாக்டரின் கண்காணிப்பில் அவர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com