கேரள மாநிலம் உருவான நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் நவம்பர் 1 ம் தேதி கேரள பிறவி தினமானது கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பு திருவிதாங்கூர், கொச்சி ஆகிய சுதேச சமஸ்தானங்களும், மதராஸ் (சென்னை) மாகாணத்தின் ஒரு பகுதியாக மலபார் பகுதியும் தனித்தனியாக இருந்தன.மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையாளம் பேசும் பகுதிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு, நவம்பர் 1, 1956 அன்று நவீன கேரள மாநிலம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலம் உருவான நாளை சிறப்பிக்கும் கேரள பிறவி தினத்திற்கு கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
அனைவருக்கும் மனமார்ந்த 'கேரள பிறவி' (Kerala Piravi) நல்வாழ்த்துகள்.நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு உருவான ஒருங்கிணைந்த கேரளம் என்பது, வெறும் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு மாநிலம் மட்டுமல்ல; அது மதச்சார்பின்மை, சகோதரத்துவம் மற்றும் ஜனநாயக உணர்வைப் போற்றும் ஒரு சமூகமாக நாம் நனவாக்கிய கனவுமாகும்.
மறுமலர்ச்சிக் கொள்கைகளாலும், இடதுசாரி முன்னேற்றங்களாலும் செதுக்கப்பட்ட இந்த 'கேரள மாதிரியை' (Kerala Model), இன்னும் கூடுதல் வலிமையுடன் முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பாகும்.
பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்து, அன்பையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்தி, வளர்ந்த மற்றும் முன்னேறிய கேரளத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
என்று தெரிவித்துள்ளார்