கேரளாவில் கோர விபத்து- தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பலி

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Road Accident
Published on
Summary

கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன?

கேரளம் மாநிலத்தின் பனம்பிக்குன்னு என்ற இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றுப்பாதையில் வாகனம் திருப்பிவிடப்படுவது குறித்த எச்சரிக்கை பலகை சரியான இடத்தில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

500 மீட்டருக்கு முன்னரே தடுப்பு, எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் விபத்து நேர்ந்திருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com