என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
ஆபாச வீடியோ விவகாரம்: தேவகவுடா பேரன் கட்சியில் இருந்து நீக்கம்
- முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
- இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார் குமாரசாமி.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.