இஸ்ரோ தனியார்மயமாகாது; 2029-க்குள் இந்தியாவில் நான்கு ஏவுதளங்கள் செயல்பாட்டில் இருக்கும் - நாராயணன்!

இஸ்ரோ தனியார்மயமாகாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இஸ்ரோ தனியார்மயமாகாது; 2029-க்குள் இந்தியாவில் நான்கு ஏவுதளங்கள் செயல்பாட்டில் இருக்கும் - நாராயணன்!
Published on: 

இந்தியாவில் வரும் 2029ம் ஆண்டுக்குள் நான்கு விண்வெளி ஏவுதளங்கள் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரோ தனியார்மயமாகது என தெளிவுப்படுத்தியுள்ள அவர், ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களுக்கான அதிகரித்து வரும் உலகளாவிய மற்றும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விழாவில் பேசிய அவர்.,

“விரிவடைந்து வரும் சூழல் அமைப்பைக் கையாள்வதற்காக, இஸ்ரோ புதிய தொழில்முனைவு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வழிகாட்டி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆயிரக்கணக்கான உயர்-தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அவர்களுக்கு வழங்கும்.

வணிக ரீதியிலான செயல்பாடுகளைக் கையாள்வதற்காக, தனியார் துறை கூட்டாண்மைகளின் ஆதரவோடு, இந்தியா 2029-ஆம் ஆண்டிற்குள் நான்கு செயல்பாட்டு ஏவுதளங்களுடன் தனது விண்வெளி செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்தும்.” என தெரிவித்தார்.

மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முதல் ஆளில்லா ககன்யான் சோதனையை நடத்தவும், அதனைத் தொடர்ந்து ஆட்கள் செல்லும் பயணத்திற்கு முன்பு மேலும் இரண்டு ஆளில்லா சோதனைகளை நடத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், "இந்தச் சோதனைகள், மாறுபட்ட அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய நிலைகளின் கீழ் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்புகள், குழுவினர் தப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் விண்கலத்தின் உட்புற அமைப்புகளை மதிப்பீடு செய்யும் மதிப்பீடு செய்யும்” என்றார்.

இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ சுமார் 8,000 தரைவழி சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாகவும், விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்கு பேர் தற்போது சிறப்புப் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com