இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.
இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து இருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார். அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.

மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com