இனி இண்டிகோவில் Business கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம் இயக்கம்

இண்டிகோ நிறுவனம் தனது 18 வது ஆண்டு விழாவை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடியதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.08 மணிக்கு புறப்பட்டது.
இனி இண்டிகோவில் Business கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம் இயக்கம்
Published on

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான இண்டிகோ முதல் முறையாக பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. 

ஒரு நாளைக்கு சுமார் 2,200 விமானங்களை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனம் தனது 18 வது ஆண்டு விழாவை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடியது. அந்த சமயத்தில் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த புதிய திட்டத்தை இண்டிகோ அறிவித்திருந்தது.

இதன்படி புதிய பிசினஸ் கிளாஸ் உடன் கூடிய இண்டிகோ ஏர்லைன்ஸ் 6E6814 விமானம் இன்று [நவம்பர் 14] டெல்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.08 மணி அளவில் புறப்பட்டு காலை 8:48 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்தது.

விமானத்தில் பயணித்த அந்நிறுவனத்தின் சிஇஓ பியட்டர் எல்பர்ஸ் [Pieter Elbers] தனது அனுபவம் க்குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலையாக ரூ.18,018 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com