Flydubai விமான சம்பவம் குறித்து FIR பதிவு செய்து விசாரணையை தொடங்கிய இந்தியாவின் NIA

33,000 அடி உயரத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்க செய்யவும் அவர் முயன்றார்.
Flydubai, NIA
Published on: 
Summary

ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 30 அன்று, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் விமானி அல் ஹம்மாமி, இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தினார்.

மேலும், 33,000 அடி உயரத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்க செய்யவும் அவர் முயன்றார்.

படுகாயமடைந்த போதிலும், விமானி ஸ்மித் மச்சார் விமானி அறை கதவைத் திறந்த பிறகு, பயணிகளும் விமான ஊழியர்களும் தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தி, சவூதி அரேபியாவின் தபூக் நகரில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

இதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் பயங்கரவாத அமைப்புகளின் சதி முயற்சி என்று சந்தேகிப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

என்ஐஏ வழக்கு

இந்நிலையில் இந்திய விமானி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க, இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) மற்றும் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டங்த்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஒரு இந்தியக் குடிமகன் என்பதாலும்,கேப்டனின் சரியான நேரத் த லையீடு ஒரு பெரும் துயரத்தைத் தடுத்ததாலும், சர்வதேச அளவிலும் சட்டரீதியான விசாரணையை நடத்துவதற்கு இந்திய அமைப்புகளுக்கு முழு உரிமை உண்டு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை

இது ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பகுதியா என்பதை தேசிய புலனாய்வு முகமை ஆராய்ந்து வருகிறது.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன், விசாரணை குழு விமானத்தின் காக்பிட் குரல் பதிவு (CVR) மற்றும் விமான தரவுப் பதிவு (FDR) ஆகியவற்றை ஆய்வு செய்யவும், சந்தேக நபரின் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்கவும் தொடங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com