12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது - பிரதமர் மோடி

சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூற வேண்டிய நாள் தான் சுதந்திர தினமாக உள்ளது.
PM Modi
பிரதமர் மோடி
Published on

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதையடுத்து தொடர்ச்சியாக 13வது தேசிய கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார்.இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்:-

இந்தியர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் வந்தே மாதரம் இன்று எதிரொலித்து கொண்டு வருகிறது.

இந்தியர்களின் கனவு எப்போதும் பெரிதாக இருக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் நினைவு கூர வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும். நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது.

நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது. தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர்.

12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.

நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும்.

இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலச் சரிவுகள் மற்றும் பெருமழைகளை எதிர்கொண்டுள்ளோம்.

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக திகழ வேண்டும். செங்கோட்டையில் வந்தே மாதரம் என்பது ஒரு சரித்திர நிகழ்வாக உள்ளது.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு 140 கோடி மக்களும் உழைக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம் தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதாக உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com